கோடை சுற்றுலா: குன்னூர் சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள்

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கே செல்லலாம்? என்ன பார்க்கலாம்? என்று சிம்ப்ளிசிட்டி வாராந்திர கட்டுரை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள் பற்றி காணலாம்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கே செல்லலாம்? என்ன பார்க்கலாம்? என்று சிம்ப்ளிசிட்டி வாராந்திர கட்டுரை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள் பற்றி காணலாம்.

சிம்ஸ் பூங்கா

உதகைக்கு அடுத்தபடியாக குன்னூரில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக சிம்ஸ் பூங்கா விளங்கி வருகிறது. குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. கடந்த 1874-ம் ஆண்டு அப்போதைய சி.எஸ்.ஐ. செயலாளர் ஜே.டி.சிம் மற்றும் அப்போதைய வனத்துறை சூப்பிரண்டு மேஜர் முர்ரே ஆகியோர் சிம்ஸ் பூங்கா-வை தொடங்கி வைத்தனர்.



அமைப்பு

சிம்ஸ் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 12.14 ஹெட்டேர் ஆகும். 10.94 ஹெக்டேர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1,768 மீட்டர் முதல் 1,798 மீட்டர் வரை உயரத்தில் உள்ளது. பூங்காவில் ருத்திராட்ச, காகிதம், கற்பூரம், யானைக் கால் மற்றும் அரக்கோரியா உள்ளிட்ட 10 வகையான மரங்கள் காணப்படுகின்றது. இதில் நூற்றாண்டைக் கடந்த மரங்களும் அடங்கும்.



இந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா வரும் குழந்தைகளை கவரும் வகையில் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுக்கள் உள்ளன. மேலும், படகு சவாரி செய்ய இங்குள்ள ஏரியில் படகு சவாரியும் விடப்படுகிறது.



கட்டண விபரம்

பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணமாக பெரியவர்க்கு ரூ.30, சிறியவர்க்கு ரூ.15, காமிராவுக்கு ரூ.50 மற்றும் வீடியோ காமிராவுக்கு ரூ.100-ம் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி செய்ய நபர் ஒருவருக்கு ரூ. 25 வசூலிக்கப்படுகிறது. 

சிம்ஸ் பூங்காவிற்கு செல்ல குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்துகளும், அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.



மேலும், குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் இந்த பூங்கா அமைந்துள்ளதால் கோத்தகிரி செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். ஆண்டு தோறும் இங்கு பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் 60-வது பழக் கண்காட்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...