கர்நாடக காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : நீலகிரி காய்கறிகள் விலை சரிவு

நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.


நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை ஓரளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் முக்கிய பயிர்களான உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டன. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்தாண்டு உச்சம் தொட்ட காய்கறிகளின் விலை இந்தாண்டு கடுமையாக சரிந்துள்ளது.



மேலும், கர்நாடகா மாநிலத்திலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரியில் விளையும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி, கிராமந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். உதகை, கூடலூர் மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டல்பெட்டிலிருந்து காய்கறி வரத்து வரும் நிலையில், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளிலிருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கோத்தகிரி வரும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்கள் முதல் குக்கிராமங்களை வரை காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். விலை சரிவு குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு சராசரி மழை பெய்ததால், காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. முக்கிய காய்கறிகளான உருளைக் கிழங்கு கிலோ ரூ.20-24, பீட்ரூட் ரூ.13-க்கு விலை போனது. கடந்த மாதம் ரூ.70க்கு விலை கேரட், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



முட்டைக்கோஸ் கிலோ ரூ.15-க்கு, பீன்ஸ் கிலோ ரூ.20, பட்டாணி கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் பெரும்பாலானோர் காய்கறிகளை அறுவடை செய்தனர். இதனால், வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறைந்து விட்டது." என்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...