ரதயாத்திரைக்கு எதிர்ப்பு: கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று தமிழகம் வருகிறது. நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்படுகிறது. 

இந்த ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



நேற்று மாலை 6 மணியில் இருந்து வரும் 23-ம் தேதி காலை மணி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

கோவை

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதரீதியில் இந்தியாவை ஆட்சி செய்ய பா.ஜ.க அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஒன்று பட்ட இந்தியாவை சீர் குலைக்கும் விஸ்வ இந்து பரிஷத்-க்கு எதிராக போராட்டம் தொடரும் என்றனர்.

சாலை மறியல் தொடர்பான தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 116 பேரை கைது செய்தனர். இதே போல் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...