வன விலங்குகளுக்காக நீரை தேக்கி வைக்கும் பணியில் வனத்துறை

உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுவது வழக்கம்.

அவ்வாறு வறட்சி ஏற்படும் போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும்.



இந்தாண்டு, முன்கூட்டியே சிறியூர், ஆனைக்கட்டு, பொக்காபுரம், மாவெனல்லா, மசினகுடி, மாயார் உள்ளிட்ட வடக்கு வனக்கோட்டத்திற்க்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் வனப்பகுதியை நோக்கி இட பெயரத் துவங்கியுள்ளன. இந்த இடப்பெயர்வை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணிரை லாரிகள் மூலம் கொண்டு வந்து நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...