கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் எனக் கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் மது (27) என்ற வாலிபர் கடந்த இருதினங்களுக்கு முன்பு பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடலைப் பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் அகலி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த, கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பா.ஜ.க., கேரள மாநிலத் தலைவர் மற்றும் அத்தொகுதி சி.பி.எம்., எம்.எல்.ஏ.,க்கள் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர். மேலும், கேரள அரசு அறிவித்த ரூ. 10 லட்ச ரூபாய்க்கு பதிலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிலா, இதுபோல, ஆதிவாசியின மக்கள் கேரளத்தில் பாதிக்கப்படக்கூடாது என்றார்.