கண் விழிப்புணர்வுக்கான வாக்கத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் கங்குலி

கோவையில், கண் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாக்கத்தான் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை : கோவையில், கண் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாக்கத்தான் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



தமிழ்நாடு கண் நிபுணர்கள் அசோசியேஷன் மற்றும் கோவை சொசைட்டி ஆப் ஆப்தமாலாஜிக்கல் சர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து கொடிசியா வளாகத்தில் 76-வது அனைத்து இந்திய ஆப்தமாலாஜிக்கல் சொசைட்டி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. நேற்று தொடங்கிய இந்த மாநாடு, 4 நாட்கள் (பிப்.,25 வரை) நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் 1,500 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் கண் சிகிச்சையில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களுடைய துறை சார்ந்த நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். 



மாநாட்டில் மொத்தம் 327 கண் சிகிச்சை அறிவியல் கருத்தரங்குகள் மொத்தம் 450 மணி நேரங்களுக்கு நடைபெற உள்ளது. 16 அரங்குகளில் நடைபெறும் இக்கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே, இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கண் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை  இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டார். 



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கங்குலி பேசியதாவது :- நான் முதல்முறையாக கோவைக்கு வருகிறேன். இந்த நகரம் மிகவும் தூய்மையாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும், கண் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் கண்ணை இழந்தால் நம்மால் 50 சதவீதம் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்தையும் இழந்ததற்கு சமம். எனவே, நாம் கண்ணை பாதுகாக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர்கள் நன்றாக செயல்பட்டு உள்ளனர். மற்ற நாட்டு வீரர்களை ஒப்பிடும் போது, இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக செயல்படுகிறது. இந்திய மகளிர் அணியினர் சிறுத்தையைப் போல செயல்படுகின்றனர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் பல வெற்றிகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அணியைக் காட்டிலும் ஆண்கள் அணிதான் நன்றாக உள்ளது. மணிஷ் பாண்டே, விருதிமான் சாஹா, ஹர்தீக் பாண்டியா போன்றவர்கள் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர். இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...