அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அவருடைய முழுத் திருவுருவ சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அவருடைய முழுத் திருவுருவ சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவாயிலில் வாழைமரம், தென்னை ஓலை, பழங்களைக் கொண்டு அலங்கார வளைவு தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை சுற்றிலும் ஜெயலலிதாவின் புகழை போற்றி விளம்பரப்  பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., கொடிகளும் வழி நெடுக கட்டப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையே விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அவருடைய சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி இருப்பது போன்று 7 அடி உயரத்தில் இந்த வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர். சிலை அருகே அந்த சிலை பீடத்தில் நிறுவப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்துவைத்தனர்

ஜெயலலிதா தொடங்கிய நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் டி.டி.வி.தினகரன் அணியினர் கட்டுப்பாட்டில் இருப்பதால், அ.தி.மு.க.,வுக்கு என்று அதிகாரப்பூர்வ  ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற பெயரில் நாளிதழும் வெளியிடப்பட்டது. அந்த நாளிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிமுகம் செய்து வைத்தனர். தொடர்ந்து அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிலையை வடிவமைத்தவருக்கு மோதிரம் பரிசளிக்கப்பட்டது. விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவைத்தலைவர்  மதுசூதனன், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர்  மற்றும் அமைச்சர்கள்  எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...