காணாமல் போன குடிநீர் கிணறுகள்..!, மீட்டெடுக்குமா மாவட்ட நிர்வாகம்...?

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சுவடின்றி மாயமான குடிநீர் கிணறுகளை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சுவடின்றி மாயமான குடிநீர் கிணறுகளை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் ஒன்றரை இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதை தவிர ஆண்டு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதைத் தவிர ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட உதகை நகரின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ் வேலி, டைகர் ஹில், மார்லி மந்து, கீழ் மற்றும் மேல் கோடப்மந்து, கோரிசோலா அணைகள் நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் உதகை சாந்தி விஜயா பள்ளி மைதானம், மார்க்கெட் நகர பேருந்து நிலையம், காந்தள் முக்கோணம், பிங்கர் போஸ்ட் பகுதியில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்லட்டி மலைப்பாதை செல்லும் ஜெர்சி பார்ம், முள்ளிக்கொரை உள்ளிட்ட பல இடங்களில் அரசு நிதியுதவியுடன் கிணறுகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த 1990-ம் ஆண்டு வரை பல இடங்களில் கிணற்று நீர் பயன்பாட்டில் இருந்தது. பார்சன்ஸ் வேலி அணை நீர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு கிணற்று நீர் பயன்பாடு மெல்ல, மெல்லக் குறைந்தது. உதகை நகராட்சி தினசரி சந்தையில் கிணறு இருந்த இடத்தில் தற்போது கடைகள் முளைத்துள்ளன. கடந்த 2002-03ம் ஆண்டில் உதகை நகராட்சி சார்பில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தூர்வாரி, பராமரிக்கப்பட்ட கிணறுகள் தற்போது பாழடைந்து கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறியுள்ளன.

உதகை நகரில் வசிக்கும் மக்களை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகரில் உள்ள கிணறுகளை தூர்வாரி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், முறையாகப் பராமரிக்கப்படாத கிணறுகளை மீட்க நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன் வருமா என்பதே உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...