கார் - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலி: 5 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர். 

பல்லடத்தில் இருந்து தாராபுரத்துக்கு கோழி தீவனங்களை ஏற்றிச் சென்ற வேன் கள்ளக்கிணறு அடுத்த மாதப்பூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார், வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோவை சேரன் நகரைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மனைவி பத்மாவதி (70) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவர் ஜெகதீஸ் (78), அறிவழகன் (22) மற்றும் வேனில் வந்த பல்லடம் வேலப்பன் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி (33), தங்கராஜ் (40), நாராயணசாமி (37) ஆகிய 5 பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர்.



இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுவிகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் பல்லடம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயகன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...