விவசாயிகளுக்கு லாபப் பயிராக மாறிய குருமிளகு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்த நிலையில், விவசாயிகளுக்கு லாபத்தைத் தரும் குருமிளகை பயிரிட்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்த நிலையில், விவசாயிகளுக்கு லாபத்தைத் தரும் குருமிளகை பயிரிட்டுள்ளனர். 

குன்னூர், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் அதிகளவு பயிரிடப்படும் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தேயிலை செடிகளை நீக்கி விட்டு விவசாயிகள் காபி விவசாயத்துக்கு மாறியுள்ளனர். மேலும், கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, ஏலம், குருமிளகு, பாக்கு போன்ற நீண்ட காலப் பயிர்களை தவிர, குறுகிய கால பயன்தரும் காய்கறிகள், நெல் மற்றும் நேந்திர வாழை, இஞ்சி உற்பத்தியிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில், விளைவிக்கப்படும் பாகற்காய், பூசணி, பஜ்ஜிமிளகாய், இஞ்சி, நேந்திர வாழை ஆகியவை அதிகளவில் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவற்றின், விலையின் ஏற்றத் தாழ்வு, கேரள சந்தையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றில், குருமிளகு விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டி தருகிறது. 

குருமிளகு மொத்த வியாபாரிகள் கூறும் போது, இந்தாண்டு காய்ந்த குருமிளகுக்கு விலை சரிந்துள்ளது. கிலோ ரூ. 850 முதல் ரூ.1,000 வரை விலை போன குருமிளகு விலை தற்போது ரூ. 450 ஆக சரிந்துள்ளது. இந்நிலையில், பச்சை குருமிளகின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ. 120 முதல் ரூ. 140 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் தற்போது குருமிளகு அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...