வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

நடிகர் கமலஹாசன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.,21) தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “நாளை நமதே” பயணத்தில் இணைந்தவர்களை வரவேற்பது பற்றியும், மாநாட்டிற்கு வால்பாறையின் சார்பாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இக்கூட்டத்திற்கு பு.கண்ணன் (வால்பாறை நகர பொறுப்பாளர்), சு.செந்தில்நாதன் (வால்பாறை நகர செயலாளர்), பு.ஜெபஸ்டீன் (வால்பாறை நகர பொருளாளர்), மு.அருண் (வால்பாறை துணை செயலாளர்), ரஞ்சித்குமார், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நம் நகர்புறங்களை தூய்மையாக வைப்பது போன்ற நலத்திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...