காட்டெருமை தாக்கியதில் தோட்ட வேலைக்குச் சென்ற பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வனவிலங்குள் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், இன்று உதகையை அடுத்துள்ள கல்லட்டி அண்ணா நகர் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த அன்னலட்சுமி (55) என்பவரை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டதாகவும், எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...