வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தல்

வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவரது 17 வயது மகள் பூர்ணாதேவியை  கடந்த 2016-ம் ஆண்டு மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாகவும், இருவரும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பூர்ணாதேவி அவ்வப்போது தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முருகானந்தத்திற்க்கு அழைத்த ரிமுஷேக், பூர்ணாதேவி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

மகளின் மரணத்தில் சந்தேகமடைந்த முருகானந்தம், செல்வ கோமதி தம்பதியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமாவிடம் தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தனர். அதனடிப்படையில், திருப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ரிமுஷேக், பூர்ணாதேவி இடையே கடந்த 9-ம் தேதியன்று சண்டை நடந்துள்ளதாகவும், இதனையடுத்தே புர்ணாதேவி இறந்துள்ளதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் தெரியவந்துள்ளது. மேலும், பூர்ணாதேவியின் உடலைக் கைப்பற்றிய வங்கதேச போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதும் திருப்பூர் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தங்களது மகள் உடலை சொந்த ஊரான திருப்பூருக்கு கொண்டு வர வேண்டும், தனது மகள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை கலைய வேண்டும், தங்கள் மகள் இறப்பிற்கு காரணமான ரிமுஷேக்கிற்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பூர்ணாதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் மனு அளிததனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...