வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் வழக்கறிஞர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆண்டுதோறும் பிப்.19-ம் தேதியைக் கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் நீதிமன்ற பணிகளையும் புறக்கணித்து வருகின்றனர்.

தொடர்ந்து இந்தாண்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் பிப்.19-ம் தேதி கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் எனவும், தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்குப் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனக் கூறினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...