ஆன்லைன் பத்திரப்பதிவை முறைப்படுத்தக் கோரி மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்: ஆன்லைன் பத்திரப்பதிவை முறைப்படுத்தக் கோரி மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திர பதிவுத்துறை சார்பில் ரூ.176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான "ஸ்டார் 2.0" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான இணையதளத்தைச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையில் அதிக கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் பத்திரப்பதிவு மூலம் ஏற்படும் தாமதத்தை கண்டித்தும், பத்திரப்பதிவு முறையை எளிமைப்படுத்தக் கோரியும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூருகையில், "எளிய முறையில், பத்தே நிமிடங்களில் பத்திர பதிவு என பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது பத்திரப்பதிவு செய்ய மூன்று நாட்களுக்கு மேல் ஆகின்றது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். எனவே, பத்திரபதிவுத்துறை அவசர கதியாக ஏற்படுத்திய ஆன்லைன் பதிவினை முறைப்படுத்திட வேண்டும்" என்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.