மர்மமாக காக்கப்படும் மாமன்ற தீர்மானங்கள்: இணையதளத்தில் வெளியிடப்படாதது ஏன்?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்வரை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது.

கோவை: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்வரை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை கூட்டப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் அதில் இயற்றப்படும். தற்போது உள்ளாட்சி நிர்வாகிகள் இல்லாததால் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து, சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தனி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றிய தகவல்களை, உரிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு  குறுந்தகட்டில் பதிவிறக்கம் செய்து வழங்குமாறு’ மாநகராட்சி மாமன்ற செயலாளர் மற்றும் பொது தகவல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.



அதற்கு மாநகராட்சி நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட பதில் கடித்ததில், 2017 ஜூலை முதல் 2018 ஜனவரி வரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தகவல்கள் கணினியில் பதியப்படாததால், நகலாக பெற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் ரூ.18,710 செலுத்தி தீர்மான நகல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதுகுறித்து தியாகராஜன் கூறுகையில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தில், குறுந்தகடு மூலமாக தகவல்களை பெறுவதற்கு, ஒரு குறுந்தகட்டிற்கு ஐம்பது ரூபாய் செலுத்தினால் போதும், ஆனால், 18 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த சொல்கின்றனர். காரணம், 2017 ஜூலை முதல் 2018 ஜனவரி வரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தகவல்கள் கணினியில் பதியப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

அப்படியென்றால், 2017 ஜூலை மாதத்திற்கு முந்தைய தீர்மான தகவல்களை குறுந்தகட்டில் அளித்துவிட்டு, மீதமுள்ளவற்றை நகல்களாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கலாம். பல ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தான் தகவல்களை பெற முடியும் என்ற தோணியில், மாநகராட்சி நிர்வாகம் பதிலளித்திருப்பது, சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்பங்கள் உச்சத்தை தொட்டிருக்கும் இன்றைய காலத்தில், மாமன்ற கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்களை கணினியில் பதிவது அவ்வளவு கடினமான காரியமில்லை.

ஆனால், அதையும் சரியாக செய்யவில்லை என்று மாநகராட்சியே ஒப்புகொண்டுவிட்டது. தீர்மானங்கள் இணையதளத்தில் வெளியிடப்படாதது பற்றிய மாநகராட்சியின் பதில்கள், பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதை உறுதிசெய்துள்ளது’ என்றார்.

இவர், கடந்த டிசம்பர் மாதமும், மாமன்ற தீர்மானங்களின் நகல்கள் வேண்டி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார், அப்போது, ரூ.13,600 செலுத்தி தகவலை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு நிர்வாகத்தில் புறையோடிபோயிருக்கும் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து, வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய கொண்டுவரப்பட்டதே தகவல் அறியும் உரிமைச் சட்டம்.  அதைப் பயன்படுத்தி உண்மையை வெளிக்கொண்டுவரச் செயல்படும் ஆர்வலர்களை அலைக்கழிப்பது ஏன்? அவர்களின் ஞாயமான கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல், அலட்சியப்படுத்துவது ஏன்? மாமன்ற தீர்மானங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பாடாதது ஏன்?

இதுபோன்ற கேள்விகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து பதிலளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...