கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங்: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள மல்டிலெவல் பார்க்கிங் பணிகளை விரைவில் தொடங்குமாறு ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள மல்டிலெவல் பார்க்கிங் பணிகளை விரைவில் தொடங்குமாறு ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் உத்தரவிட்டார்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா நேற்று காலை கோவை ரயில் நிலையத்திற்கு ஆய்வுக்காக வந்தார். அவரை கோவை ரயில் நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன்  பின்பு மல்டிலெவல் டூவிலர் பார்க்கிங் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் துவக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பார்சல் ஆபிஸ், லிப்ட் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். எஸ்கிலேட்டர் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரயில் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டு வரும் நிழற்குடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

மேலும் ரயில் நிலையத்திற்கு காரில் வருபவர்களுக்கு தனி வழி அமைக்கும் பணி, பிளாட்பார்ம் 1 ஏ-யின் காம்பவுண்ட் சுவரில் பெயிண்ட் அடித்து அழகுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளை சுமார் 1 மணி நேரம் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் மிஸ்ரா பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் ஹரிசங்கர் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநர் சதிஷ் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...