தீவிபத்தில் சிக்கி மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சையை இலவசமாக பெற்ற பயனாளிகள் சந்திப்பு நேற்று மாலை கங்கா மருத்துவமனையில் நடைபெற்றது.
கோவை: தீவிபத்தில் சிக்கி மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சையை இலவசமாக பெற்ற பயனாளிகள் சந்திப்பு நேற்று மாலை கங்கா மருத்துவமனையில் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மேட்ரோபாலீஸ் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கின. இந்த திட்டத்தின் மூலம் 354 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மக்கள் கலந்து கொண்டனர். 'நெருப்புக்குப் பின் நம்பிக்கை' என்ற இந்த திட்டத்தால் விலை அதிகமான அறுவை சிகிச்சைகள் இலவசமாக கங்கா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.