உதகையில் உலா வரும் கரடி - அச்சத்தில் மக்கள்

உதகையை அடுத்த மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வரும் நிலையில் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கரடி பேரூந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்.


நீலகிரி: உதகையை அடுத்த மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வரும் நிலையில் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கரடி பேரூந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பஜார் பேரூந்து நிலையம் பகுதியில் ஆண் கரடி ஒன்று இரவு 7 மணிக்கு மேல் உலா வருகிறது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு மசினகுடி காவல் நிலையத்தில் புகுந்த கரடி, நேற்று முன் தினம் இரவு நெடுஞ்சாலை தங்கும் விடுதியில் புகுந்தது. அத்துடன் அங்குள்ள ஒரு வீட்டின் கூரையை பிரித்து உள்ளே நுழைய முயன்றது. 

மேலும் ஒருவர் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு சென்ற போது அவரை துரத்தியுள்ளது. இந்த கரடி இன்று அதிகாலை மசினகுடி பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் காவல் நிலையம் பகுதிக்கு சென்றது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ள நிலையில் வனத்துறையினர் இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க தாமதம் செய்து வருவதால் மக்களை இந்த கரடி தாக்கும் அபாயம் உள்ளது. ஒரு மாத காலமாக குடியிருப்பு, காவல் நிலையம், மாநில நெடுஞ்சாலை தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் உலா வருவதால் இரவு 9 மணிக்கு மேல் யாரும் வராமல் பயப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...