வாளையார் அருகே ரயில் பாதையை சுத்தப்படுத்திய தன்னார்வலர்கள்

இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை : இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 



கோவை சோளக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் அதிக குப்பைகள் சேர்வதாக வந்த தகவலையடுத்து இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் வனத்துறையுடன் இணைந்து இன்று அப்பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 

60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்கைப் பற்றியும் வனத்துறையினர் விவரித்தனர். 

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் பிரசாத் கூறுகையில், " நகர்ப்புற மக்களின் அறியாமை வன உயிரினங்களுக்குத் தீங்காக அமையும். இந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துண்டுகள் வீசிவிட்டு செல்கின்றனர். இது வன உயிரினங்களைப் பாதிக்கிறது. ரயில்வே பாதையை தூய்மைப்படுத்துவதும். காடுகளை பாதுகாப்பதுவும் அத்தியாவசியமான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...