சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை சுவைத்தது சென்னை எப்.சி.

ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கும் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடி, அதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 போட்டிக்குத் தகுதி பெறும். சென்னை அணிக்கு கோவை வ.ஊ.சி உள்விளையாட்டு அரங்கம் சொந்த மைதானமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணி தனது 17-வது லீக் ஆட்டத்தில், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை எதிர்கொண்டது.

ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய சென்னை அணியினரின் ஆட்டத்திற்கு, கோவா வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டியின் 26-வது நிமிடத்தில் சென்னை அணியின் அலெக்ஸாண்டர் ராகிக் செர்பியா முதல் கோலை அடித்தார். இதனால், உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அடங்குவதற்குள், கேப்டன் சூசைராஜ் 28-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் சூசைராஜ் மீண்டும் ஒருகோலை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்ததால், ரசிகர்கள் ஆராவாரத்துடன் காணப்பட்டனர். இறுதியில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது 91-வது நிமிடத்தில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் கேப்டன் ஒகி மாண்டே ஆறுதல் கோலடித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சொந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி, 5 டிரா) முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...