பயன்பாடற்று கிடக்கும் தடுப்பணைகளை பராமரிக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே, ஜீன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமையும் பெய்யும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை மழை முற்றிலும் பொய்த்தது.

இந்நிலையில் வறண்டு காணப்பட்ட அணைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் உயர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், உதகையை அடுத்த கடநாடு, ஒடயரட்டி, கூக்கல், கூக்கல்தொரை உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் விவசாயிகளின் நலன் கருதியும், கிராம மக்களின் குடிநீர் நலன் கருதியும் பல இலட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த தடுப்பணைகள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி வருகின்றன. இதனால், மலைதோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதகதியில் கிராமப்புற பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகளை தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே வரும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் மேற்கொள்வதோடு, குடிநீர் பிரச்சனைக்கும் முழு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...