முதலமைச்சர் வருகையையொட்டி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பம் சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

நீலகிரியில் முதலமைச்சருக்காக வைக்கப்பட்ட கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி: நீலகிரியில் முதலமைச்சருக்காக வைக்கப்பட்ட கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குன்னூர் ஒட்டுபட்டறையில் உள்ள முத்தாலம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்கள் வருகையையொட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வழிநெடுகிலும் பேனர்களும் கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், பாரூக் என்பவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குன்னூரைச் சேர்ந்த லால்ஸ் ஃபால்ஸ் அருகே சென்ற போது, கொடிக் கம்பம் அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் உதவியுடன் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்த பாரூக்கின் உறவினர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.



பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, பாரூக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். நீதிமன்ற உத்தரவுகளை மீறி பொதுமக்களுக்கு இன்னல் தரும் கட் அவுட், கொடி கம்பங்கள் வைப்போர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே, அ.தி.மு.க., பேனரால் இறந்த ரகுவின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்காத போது, அடுத்தடுத்து பொதுமக்களுக்கு துன்பம் தருவது பொதுமக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தவறுகளைக் கண்டிக்க வேண்டிய ஆட்சியாளர்களே ஆட்சியில் இருக்கும் போது பொதுமக்களுக்கு எதிராக துன்பம் கொடுத்தால் புகார்களை யாரிடம் தருவது என்ற கேள்வியும் உள்ளங்களில் எழுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...