காவிரி நதிநீர் தீர்ப்புக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், ஏற்கனவே நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி. நீரை விட 14.75 டி.எம்.சி. நீர் குறைத்து வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கோவை காந்தி மாநகர் பகுதியில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பேது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழக விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், இதனைக் கண்டிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...