திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல்லடம் பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவருக்கு கவிதா (42) என்ற மனைவியும், லாவண்யா (23), ப்ரியா (21) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ஓட்டுநராக ஆரம்பக் காலத்தில் வேலை செய்து வந்த சுப்பிரமணி வாட்டசாட்டமாக இருந்ததால் பல்வேறு மேடைநாடகங்களில் நடிக்கத் துவங்கினார். இவரது நடிப்பைக் கண்டு திரைப்படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிக்கு கோவைதேசிங்கு என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. மனம்கொத்திப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களிலும், சந்தனக்காடு, வாணி-ராணி, வைரநெஞ்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை சபரிமலைக்கு மாலையணிந்து யாத்திரையாகச் சென்ற அவர், சரங்கொத்தி என்ற பகுதியில், மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சபரிமலையிலிருந்து நடிகர் சுப்பிரமணியின் உடல் பல்லடம் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள், அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் கோவைதேசிங்கு இறந்த சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், பழக மிகவும் எளிமையானவர் என்றும், அவரது இறப்பு தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.