ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகளை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையர்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குடிநீர் உபயோகத்தை அளவீடு செய்வதற்காக புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குடிநீர் உபயோகத்தை அளவீடு செய்வதற்காக புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



கோவை மாநகராட்சியில் பழைய 60 வார்டுகளில் வாட்டர் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, குடிநீர் உபயோக அளவீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஏற்படும் தாமதத்தை தடுக்கும் பொருட்டு நவீன ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மத்திய மண்டலம் வார்டு எண் 73-க்குட்பட்ட 1,131 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய வாட்டர் மீட்டர் கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகள் மூலம் குடிநீர் உபயோகிக்கும் அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டு, இணைப்புதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்படும். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திலிருந்தே இணையதளம் மூலம், ஒவ்வொரு குடிநீர் இணைப்பிற்கும் மாதம் மற்றும் நாட்கள் வாரியாக எவ்வளவு குடிநீர் உபயோகத்தப்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்து கொள்ளலாம்.

இன்று நடைபெற்ற ஆய்வின் போது, மத்திய மண்டலம் வார்டு எண். 73-க்குட்பட்ட அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் புதிய  வாட்டர் மீட்டர் கருவிகள் பொருத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு ஆணையாளர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...