ரயில்பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணிநிறுத்தம்

இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கையாக, முக்கிய ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது.

இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கையாக, முக்கிய ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது. 

 

தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்நிலையங்களில் சோதனை அடிப்படையில் ரயில்பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது. இத்தகு பசுமை நடவடிக்கை தற்போது, இந்திய ரயில்வேயில் உள்ள ஏ1, ஏ மற்றும் பி பிரிவு ரயில்நிலையங்களுக்கும் மார்ச் 1-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்படுகிறது. சேலம் கோட்டத்தின் கோவை ரயில் நிலையம் ஏ1 பிரிவின் கீழும், சேலம், மேட்டுப்பாளையம், ஈரோடு, கரூர், மற்றும் திருப்பூர் ரயில்நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் வருகின்றன. பி பிரிவு ரயில்நிலையம் சேலம் கோட்டத்தில் இல்லை. இந்தப் பசுமை நடவடிக்கை மூலம், தெற்கு ரயில்வேயில் மட்டும் ஆண்டொன்றுக்கு 28 டன் பேப்பர் சேமிக்கப்படுவதுடன் ரூ.1.70 லட்சம் மிச்சமாகிறது.   

இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரயில்பயணிகளுக்கு, குறிப்பாக வயது முதிர்ந்த பயணிகளுக்கு உதவ, அந்த ரயில்நிலையங்களின் முக்கிய பகுதிகளில் முன்பதிவுப் பயணிகள் பட்டியல் ஒட்டப்படுவதுடன், பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் இருக்கும் பயணிகள் பட்டியல் மூலமாகவும், பயணிகள் தங்களது முன்பதிவு இருக்கையின் எண்ணை அறிந்து கொள்ளலாம். 

இது தவிர, குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு அனுப்பட்டு வருவதுடன், இந்திய ரயில்வேயின் www.indianrailways.gov.in மற்றும் www.irctc.co.in இணையதளங்கள் மூலமாகவும், ரயில்வே தகவல் உதவி தொலைப்பேசி எண், 139க்கு தொலைப்பேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...