நெல்கொள்முதல் தொடர்பான புகார்களை அளிக்க அலைபேசி எண்கள் அறிவிப்பு

நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை அளிப்பதற்காக அலைப்பேசி எண்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவை: நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை அளிப்பதற்காக அலைப்பேசி எண்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2017-2018க்கு கீழ்க்காணும் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (கோவை மண்டலம்) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் கோட்டூர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்யப்படுகின்றது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சன்னரக நெல் ஊக்கத் தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,660 ஆகவும், பொதுரக நெல் ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600ஆகவும், வழங்கப்படுகின்றது.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லிற்கு நேரடியாகக் கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் பணம் வழங்குதல் கூடாது. மாறாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்குண்டான தொகை முழுவதும் நேரடியாக மின்னனுபரிவர்த்தனை மூலம் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 தினங்களுக்குள் வரவு வைக்கப்படும். ஈரப்பதம் 17 சதவிகிதம் வரை உள்ள தரமான நெல்லிற்கு எவ்வித பணப்பிடித்தமும் இன்றி நெல் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் இதுதொடர்பாக வரும் எவ்விதப் புகார்களையும் 0422-2440272 என்ற எண்ணில் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அவர்களையோ, 9884211417 என்ற எண்ணில் கோவை மாவட்ட மேலாளர் அவர்களையோ, 9486178971 என்ற எண்ணில் கோவை கொள்முதல் அலுவலரையோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...