சாலை விபத்தில் இளைஞர்கள் பலி

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் தமிழரசன் (29). இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது நண்பரான பினேஸ் (28) என்பவருடன் வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் காரமடை அருகே  காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

காரமடை ஆசிரியர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் மற்றும் பீனேஸ் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர் ஒட்டுநர் மதியழகனை தேடி வருகின்றனர். விபத்திற்கு பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு வந்ததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் அதிக வேகமாக தொடர்ந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பினேஸ் என்பவருக்கு அன்மையில் திருமணமாகிய நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...