திருப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு

திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், வாடிவாசல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், வாடிவாசல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். 

பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் வரும் 18-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடக்கிறது. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வாடிவாசல் அமைக்கும் பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன் பார்வையிட்டார். ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தையும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



இதனிடையே, செய்தியாளர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதல்முறையாக திருப்பூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 800 காளைகள் பங்குபெற உள்ளது. நிகழ்ச்சியைக் காண 1 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பழனிச்சாமி, காவல்துறை கண்காணிப்பாளர் உமா, முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...