பெங்களூரூவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கட்டிட விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கட்டிட விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், விபத்து நடந்தப் பகுதியில் அமைச்சர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...