நிலவருவாய் ஆய்வாளருக்கு தகவல் பலகையில் கோரிக்கை விடுத்த இளைஞர்

திருப்பூரில் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலரை ஒன்றரை மாதங்களாக பார்க்க முடியாததால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக அலுவலக தகவல் பலகையில் எழுதிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலரை ஒன்றரை மாதங்களாக பார்க்க முடியாததால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக அலுவலக தகவல் பலகையில் எழுதிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.



அனுப்பர்பாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மதன் (29). இவர் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு மதனின் தந்தை மகேந்திரன் இறந்துவிட்டார். இதனால், வாரிசு சான்றிதழ் கோரி வேலம்பாளையம் கிராமநிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்ற மதன், பின்னர் வேலம்பாளையம் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதற்காக அவர் ஒன்றரை மாதங்களாக பலமுறை நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், அங்கு நிலவருவாய் ஆய்வாளர் இல்லாததால் அவரை சந்தித்து விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கவில்லை எனத் தெரிகிறது. 

இந்த நிலையில், காலை வழக்கம்போல மதன் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றபோது, வருவாய் ஆய்வாளர் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்துள்ளார். அங்குள்ள தகவல் பலகையில் நிலவருவாய் ஆய்வாளர் அதிகாரி அவர்களே, இன்றோடு எட்டாவது நாள் உங்களைப் பார்க்க வருகிறேன். நீங்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை. நீங்கள் வரும் நேரத்தை எழுதி வைத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படுமே. இப்படிக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை வரியாக அளிக்கும் இந்திய குடிமகன் என்று எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த நேரத்தில் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, இந்த தகவல் அறிந்த உடன் அந்த தகவல் பலகையில் எழுதப்பட்டிருந்தது அழிக்கப்பட்டது. மேலும், உடனடியாக அதே பலகையில் ஆர்.ஐ. வருகை 5 மணிக்கு என்று எழுதப்பட்டது. சிறிது நேரத்தில் அலுவகத்திற்கு வந்த நிலவருவாய் ஆய்வாளர் ராசு, மதனை அழைத்து உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்கினார். 

இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ராசு கூறியதாவது :- திருப்பூர் வடக்கு தாலுகாவுக்குட்பட்ட வேலம்பாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம் ஆகிய 4 கிராமங்களுக்கு ஒரு வருவாய் ஆய்வாளர் என்பதால் பெரும்பாலும் களப்பணி தொடர்பாக வெளியில் செல்வது வழக்கம். மேலும், கடந்த சில நாட்களாக அலுவலக ரீதியாக பயிற்சிக்கு சென்றுவிட்டதால் அலுவலகத்திற்கு வரமுடியவில்லை. வாரிசு சான்றிதழுக்காக விண்ணப்பித்த மதன் இன்றுதான் விண்ணப்பத்தையே என்னிடம் கொடுக்கிறார். மேலும், அவருடைய தந்தை மகேந்திரனின் பெயரை நேற்றுதான் குடும்ப அட்டையில் இருந்து நீக்கி உள்ளார். அப்படி இருக்கும்போது எப்படி அவர் கடந்த 1 1/2 மாதங்களாக சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியும். என்றார். இந்த சம்பவம் காரணமாக நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...