''மார்ச் 31-ம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகள் உருவாக்கப்படும்”

வரும் மார்ச்-31-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை : வரும் மார்ச்-31-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இன்று (பிப்.,15) சென்னை, பனகல் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் உன்னத் திட்டமான தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் (தாய்) திட்டம், ஊரக குடியிருப்புத் திட்டங்களான முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், “தானே” வீடு வழங்கும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுதல், ஊரக சாலைப் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, தற்போது நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும், தரமானதாகவும், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, மக்கள் பயன்பெறத்தக்க வகையில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,  நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில் திட்ட அலுவலர்கள் விரைவாக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் இதுவரை 8,676 ஊராட்சிகள் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,848 ஊராட்சிகளை திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அறிவிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்ட இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டிற்கு இலக்கிடப்பட்ட ரூ. 23.33 கோடி மனித சக்தி நாட்களில் இதுவரை ரூ. 21.88 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தின் கீழ், இதுவரை ரூ. 5,250.20 கோடி ஊதியத்திற்கும், ரூ. 524.22 கோடி பொருட்கூறு செலவினத்திற்கும், ரூ. 99.57 கோடி நிர்வாக செலவினத்திற்குமாக ஆக மொத்தம் ரூ. 5,873.99 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் திட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் கோரி வரப்பெறும் அனைத்துப் புகார்களின் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி-110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், மானியக் கோரிக்கை அறிவிப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி இயக்குநர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர்கள், கண்காணிப்பு பொறியாளர் (ஊரக வளர்ச்சி), அனைத்து மாவட்டங்களின் திட்ட இயக்குநர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் (ஊரக வளர்ச்சி) உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...