பொதுமக்களை 10 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வைக்க கூடாது - பத்திர பதிவுத்துறை உத்தரவு

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கக் கூடாது என்று பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கக் கூடாது என்று பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும், பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பதிவுத்துறையில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். ஆவணப்பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும்போது தொழில்நுட்ப காரணங்களை கூறி ஆவணப்பதிவை முடிக்க காலதாமதம் செய்வதாக புகார்கள் வந்துள்ளன.

தொழில்நுட்பம் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பதிவை மேற்கொள்ள இயலாத நிலையில் 10 நிமிடங்களுக்கு மேல் மக்களை காத்திருக்க வைக்கக்கூடாது. இணைய இணைப்பு இல்லாத ‘ஆப்லைன்’ முறையில் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

அந்த வகையில் அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி பொதுமக்களின் சிரமங்களை போக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மாவட்ட பதிவாளரும் தங்களின் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏதாவது 4 அலுவலகங்களுக்கு தினமும் தவறாமல் சென்று கண்காணிக்க வேண்டும்.

அப்போது, முன்சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? ஆவணப்பதிவுக்காக மக்கள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா? பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதா? ஆவண எழுத்தர் மற்றும் மக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அறிக்கை

மேலும் அவர்களுக்கு போதுமான தொடர் பயிற்சி தரப்பட்டுவிட்டதா?, முன்சரிபார்ப்பு பணி முடிந்து ஆவணம் உடனுக்குடன் ஆவணதாரருக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதா? கணினி உபகரணங்களின் பழுதுகள் அனைத்தும் முறையாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டு புகார் எண் பெறப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் சரிபார்த்துவிட்டு அதுதொடர்பான அறிக்கையை தினமும் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...