திருமணமான ஆடு-நாய்க்கு விவகாரத்து வழங்க வேண்டும் - த.பெ.தி.க

காதலர் தினத்தில் இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்து வைத்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்க கோரி கோவையில் இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

கோவை: காதலர் தினத்தில் இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்து வைத்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்க கோரி கோவையில் இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆலமேலு என்ற ஆட்டிற்கும், அஞ்சலி என்ற நாய்க்கும் இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆடு மற்றும் நாயுடன் திரண்டு போராட்டம் நடத்தினர். 

இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒருவனுக்கு ஒருத்தி என்றும், தாலி கட்டியவுடன் வாழ்வது தான் கலாச்சாரம் என்றும் கூறும் இந்து அமைப்பினர், தாலி கட்டி திருமணம் செய்த ஆட்டையும், நாயையும் நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர். இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்த ஆட்டுக்கும், நாய்க்கும் விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். மேலும், இவற்றை கணவனுடன் சேர்த்து வைக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்து ஒராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விவகாரத்து மனு தாக்கல் செய்வார்கள்" என்றார். 



இந்த நூதன போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...