நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருகிறது - நல்ல. ஜி.பழனிச்சாமி

நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார்.


கோவை: நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார். 

கே.எம்.சிஎச். மருத்துவமனையில் மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயின் உயிரியல் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய உதவும் வகையிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க துல்லியமான தகவல்களை அளிக்கும் இந்த மையத்தினை கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், " கே.எம்.சிஎச். மருத்துவமனை கோவை மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மரபணு மாற்றத்தால் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. இவ்வகை நோய்களை மரபியல் மையம் மூலம் சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் முடியும். இந்த மேம்பட்ட மையத்தில் மரபணு மரபணு அடிப்படையிலான தீர்வுகளை எங்கள் சிறந்த மருத்துவக்குழு வழங்கும்." என்றார்.

மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையத்தின் தலைவர் சியாம் சந்தோஷ் பேசுகையில், " இந்த மையம் நவீன தொழில் நுட்பத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவிகரமாக இருக்கும். இந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வுக்கான நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.



"நோய்கள் குறைவான சமுதாயத்தை உருவாகுவது எங்கள் மருத்துவமனைக்கு முக்கிய நோக்கம். இந்த மையம் கர்ப்ப காலத்தில் குழந்தையின் குறைபாடுகளை கண்டுபிடிக்க உதவும்" என்று மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மைய மருத்துவர் கிருஷ்ண சாமிநாதன் தெரிவித்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...