மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி 6-வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி 6-வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகா-அர்ஜூனன் தம்பதியினர். இவர்களுக்கு அகிலாண்டேஸ்வரி (6) என்ற பெண் குழந்தை இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வரக்கூறி சிகிச்சை அளித்து வந்தனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலோயில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.



"சிறுமி உயிரிழப்புக்கு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடே காரணம்" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இனியாவது நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உரிய சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...