நகை பறிப்பு கொள்ளையர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.



கோவை மாநகரை குற்றமில்லா நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.



இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறித்து சென்றவர்களை கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.



அந்த காட்சியில், இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு வாலிபர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை பறித்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம் பெற்றுள்ள நபர்கள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...