சிறுவனைக் கொன்ற சிறுத்தைப்புலி சிக்கியது

வால்பாறை பகுதியில் சிறுவனைக் கொன்ற சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுவனைக் கொன்ற சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த வாரம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முத்தலி என்பவரின் 4 வயது மகன் செய்துல் என்பவரை சிறுத்தைப்புலி இழுத்துச் சென்றது. 

வெகுநேரம் குழந்தையை காணாத பெற்றோர்களுடன் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வனத்துறையினரும் சேர்ந்து சுமார் 2 மணிநேரங்களுக்கும் மேலாக தேடினர். அப்போது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேயிலைச் செடிக்குள் தலை வேறு உடல் வேறாக குழந்தை இறந்து கிடப்பதை தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இறந்த குழந்தையின் உடலை எடுக்க விடாமல் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என்று கூறி தொடர்ந்து குழந்தையின் உடலை எடுக்க மறுத்தனர். 

தொடர்ந்து அங்கு வந்த வால்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் சமரச பேச்சுவார்த்தை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் இறந்த குழந்தையின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்குப் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் வால்பாறை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு குழந்தையை கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலியைப் பிடிப்பதற்கு 4 இடங்களில் கூண்டுகள் வைத்தனர். அதன்படி, நடுமலை எஸ்டேட் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் ஒரு கூண்டும், ரூபவ் வால்பாறை உள்ள ஆலயம் அருகில் ஒரு கூண்டும், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நல்லகாத்து சாலையில் ஒரு கூண்டும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு கூண்டும் என நான்கு கூண்டுகள் வைத்து 4 கேமராக்கள் பொருத்து இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலி நடுமலை எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிக்கியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். இருப்பினும் இதுபோன்று மேலும் சில சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதாகவும், இந்த சிறுத்தைகளையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...