24வது ஈஷா மகாசிவராத்திரி விழா 112 அடி ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கோவை : 24வது ஈஷா மகாசிவராத்திரி விழா 112 அடி ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் 'சொல்லேருழவன்' செல்லமுத்து, நடிகை தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் லிங்க பைரவி தேவியின் உற்சவ மூர்த்தி பிரமாண்ட ஊர்வலமாய் ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு வந்தடைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை உலகமக்கள் அனைவருக்கும் எடுத்து செல்வதை குறிக்கும் விதமாக சத்குரு மகாயோக யோகேஸ்வரலிங்கம் முன்பு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இரவு முழுவதும் அனைவரும் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளில் வழங்குவது ஈஷா மகாசிவராத்திரியின் தனிச்சிறப்பாகும். இவ்வருடம் புகழ்பெற்ற பாடகர் சோனுநிகாம் மற்றும் தலெர்மெஹந்தி, மோஹித் சவுஹான் மற்றும் சியன் ரொனால்டோ ஆகியோரின் இசைநிகழ்ச்சிகள் மக்களை முழு இரவும் விழிப்பாக உற்சாகமாக வைக்கும் மருந்தாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும், சந்தோஷ் ஷெட்டி குழுவினர் மற்றும் மணிப்பூர் ட்ரம்மர்ஸ் வழங்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சௌண்ட்ஸ் ஆப் ஈஷா (Sounds of Isha ) இசைக்குழுவினரின் உற்சாகமான இசைதொகுப்புகளும் அரங்கேறியது. மற்றும் 117 தன்னார்வலர்கள் ஆதியோகிக்கு அர்பணிக்கவிருக்கும் மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும் நடைபெற்றது. முக்கியமாக சத்குரு சொற்பொழிவுகளும், மகாமந்திர உச்சாடனையும், நள்ளிரவு தியானமும் பார்வையாளர்களை விழிப்புடனும், உற்சாகத்துடனும் தியான நிலைஉணரவும் வழிவகுத்தது.