''மாநிலங்களுக்கு நிதி வழங்காமல், மத்திய அரசு அல்வா கொடுக்கிறது''

மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை : மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க தான் விரும்பவில்லை. மேலும், இவ்விவகாரத்தில் கட்சியின் கருத்தே எனது கருத்து. 

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரினால், புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இருப்பினும், புதுச்சேரியில் முறையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி அல்வாதான் கொடுக்கிறது. வேலையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினால், பாரத பிரதமர் பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா..?.'' என்றார்.  

வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரியவுள்ளதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் சுமூகமான உறவையே மேற்கொள்ள தங்கள் கட்சி நினைப்பதாகக் கூறினார். பின்னர் சாலை மார்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு சென்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...