காதலர் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய கலப்புத்திருமணம் செய்த தம்பதிகள்

உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

கோவை : உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 18-ஆம் ஆண்டாக காதலர் தினத்தை கேக் வெட்டி குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், காதலர் தினம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தான் சாதிய எண்ணம் கொண்ட மதவாதிகள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு, சாதிய கட்டுமானங்கள், காதல் திருமணங்களால் தகர்ந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம். மேலும், இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆணவக்கொலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, மத மறுப்பு செய்துகொண்டவர்களுக்கு எனத் தனி ஆணையம் அமைத்து, அவர்களது குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...