திருப்பூரில் செவிலியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் : மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருப்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார மைய செவிலியர் தற்கொலைக்குக் காரணமான மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்றாவது நாளாக செவிலியரின் உடலை வாங்க மறுத்து காங்கேயம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் செவிலியர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார மைய செவிலியர் தற்கொலைக்குக் காரணமான மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்றாவது நாளாக செவிலியரின் உடலை வாங்க மறுத்து காங்கேயம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் செவிலியர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மணிமாலா. கடலூர் மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக செவிலியராக வெள்ளகோயில் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டார். 

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி மணிமாலா விடுமுறை எடுத்ததற்கு மருத்துவ அலுவலர்கள் அகிலாண்டேஸ்வரி மற்றும் தமயந்தி ஆகியோர் விளக்கம் கேட்டதோடு மணிமாலாவிற்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10-ம் தேதி இரவு வெள்ளகோயிலில் தான் தங்கி இருந்த அரசு குடியிருப்பில் தூக்கிட்டு மணிமாலா தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மணி மாலாவை தற்கொலைக்குத் தூண்டிய அரசு மருத்துவ அலுவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறி கடந்த மூன்று நாட்களாக மணிமாலாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் செவிலியர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



காவல்துறை சுகாதாதத்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...