முதலமைச்சர் பழனிசாமியிடம் 27 பரிந்துரைகளை வழங்கினார் ஸ்டாலின்

சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், போக்குவரத்துக் கழகத்தை சீர் செய்வது குறித்த 27 பரிந்துரைகளை வழங்கினார்

சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், போக்குவரத்துக் கழகத்தை சீர் செய்வது குறித்த 27 பரிந்துரைகளை வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க., சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதனை முதலமைச்சர் பழனிசாமியிடம் ஒப்படைக்க தி.மு.க., சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நேரம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து, போக்குவரத்துக் கழகத்தை சீர் செய்வது குறித்த தி.மு.க.,வின் அறிக்கையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:- போக்குவரத்துக் கழகத்தை எப்படி சீரமைப்பது குறித்து ஆராய தி.மு.க., சார்பில் அமைப்பட்ட குழு 27 பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பேருந்து கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை. 

இந்த அறிக்கையின்படி, போக்குவரத்துக் கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும். டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரே சீரான 10 சதவீத ஜி.எஸ்.டி., வரியை விதிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும். பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்

முதலமைச்சருடனான சந்திப்பின் போது, துணை முதலமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இருந்தனர். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளோம். அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. பார்ப்போம் எனக் கூறியுள்ளனர். அரசு நிர்வாகம் செயல்படாத நிலையில் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் யோசனை கூறியுள்ளோம். எங்கள் பரிந்துரைகளை செயல்படுத்தினால் வரவேற்போம். இல்லாதபட்சத்தில், தேவைப்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம். பொருட்கள் கட்டுமானத்தில் கமிஷன் வாங்குவதை கட்டுப்படுத்தினால் கடனைக் குறைக்க முடியும். 

அவர்கள் மீதான தவறுகளை மறைக்க, அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்துள்ளோம். சட்டசபையில், ஜெயலலிதா படத்தில் எந்த அடிப்படையில் திறக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். ஜெயலலிதா பட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோரை அழைத்தும் வரவில்லை. ஏன் வரிவில்லை என்பது குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...