குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னோசன்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி : குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னோசன்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நீலகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் வகையிலும் குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது குழந்தை திருமணம் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை திருமணம் ஏற்பாடு செய்பவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மற்றும் பெண் வீட்டார், மணமகன் வீட்டார், குழந்தை திருமணம் என தெரிந்தும் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், பத்திரிகை அச்சடித்து கொடுக்கும் அச்சக உரிமையாளர்கள், அந்த திருமணத்தில் கலந்து கொண்டோர் என அனைவரின் மீதும் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பிணையில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் தாமதமின்றி சைல்டு லைன்-1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, குழந்தை திருமணத்தை தடுத்திட மக்கள் உதவிட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னோசன்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...