ஏ.டி.எம். கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

கோவையை அடுத்த பீளமேடு பகுதியில் 3 வங்கிகளின் ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு ரூ.30 லட்சம் கொள்ளை போன வழக்கில் கைது செய்யப்பட்ட, கும்பல் தலைவனை 3 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை : கோவையில் அரங்கேறிய ஏ.டி.எம். கொள்ளை தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பீளமேடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 3 வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உடைக்கப்பட்டு ரூ. 30 லட்சம் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கு தொடர்பாக அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் 8 பேரை, நாமக்கல் அருகே வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர். ஒரு லாரி, 2 கார்கள், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் விசாரிக்கையில், ஏ.டி.எம். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் தலைவன் அரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீன்(43) என்பதும், கொள்ளை பணத்தை அவனிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, கடந்த 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த இஸ்லாமுதீனை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்பு ஜே.எம்.6  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏ.டி.எம். கொள்ளைக்கு தலைவனாக செயல்பட்ட இஸ்லாமுதீனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ராஜவேலு முன்னிலையில்  நடந்தது. விசாரணைக்கு பிறகு 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தும், வரும் 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் இஸ்லாமுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...