பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் வாகனம் வழங்கப்படவுள்ளது- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியானவர்கள் இன்று (ஜனவரி 22) முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 22

கோவை மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியானவர்கள் இன்று (ஜனவரி 22) முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியம் ரூ.25000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். பயனாளிகளே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். வாகனம் 01.01.2018-க்கு பின்னர் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். 125 சிசி திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த வாகனங்கள் பணிபுரியும் மகளிருக்கு வழங்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுய தொழில் செய்யும் பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், மாவட்ட கற்றல் மையம், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இத்திட்டத்தின்கீழ் இரு சக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் இருக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்து திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5 கடைசி நாளாகும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

இத்திட்டத்தின்கீழ் பயன் பெற கீழ்க்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வயதிற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வேலையின் தன்மைச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடமிருந்து பெற வேண்டும்), ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட - பழங்குடியினராக இருந்தால்) ஆகியவற்றை சமர்;ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...