கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.


கோவை, ஜனவரி 21

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.



கோவையில் முதன்முறையாக வரும் 28-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற இருக்கின்றது. 

ஜல்லிக்கட்டு விழாவிற்கு வாடிவாசல் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவையை அடுத்த செட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம் கார் பவுண்டேசன் இணைந்து நடத்துகின்றனர். 

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இதற்காக இடம் தயாராகி வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது  தற்போது வரை 750 காளை மாடுகளும் , 550 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து அமைச்சர் கூறுகையில், "தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மதுரையில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 

கடந்தாண்டு அனைத்து மாவட்டத்திலும் இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டுக்காக குரல் கொடுத்தனர். அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு நடந்தது. 

கோவையில் கடந்தாண்டே  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரிக்கை எழுந்தது.

இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கர் அமைப்பும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது" என்றார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...