கோவையில் போக்குவரத்து போலீஸாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் வாகன சோதனையின்போது சாலையில் நடுவே புகுந்து வாகனத்தை தடுத்து நிறுத்த போக்குவரத்து போலீஸார் முயன்ற போது, விபத்து ஏற்பட்டதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால், ஆத்திமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத்தோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை, ஜனவரி 20

கோவையில் வாகன சோதனையின்போது சாலையில் நடுவே புகுந்து வாகனத்தை தடுத்து நிறுத்த போக்குவரத்து போலீஸார் முயன்ற போது, விபத்து ஏற்பட்டதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால், ஆத்திமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத்தோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் ஒருமணி நேரத்திற்கு மேலாக திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள இராஜலட்சுமி மில் அருகே 3 போலீஸார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டு வந்தனர். அப்போது, சிங்காநல்லூரில் இருந்து சுங்கம் நோக்கி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். இதனை அறிந்த போக்குவரத்து போலீஸார் அவர்களிடமிருந்து தப்பிகாமல் இருக்க சாலையின் நடுவே அவர்கள் வழிமறித்து சாவியை பறித்ததோடு கையை பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.



இதனையடுத்து, அவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வால்பாறையை சேர்ந்த விஜேஷ் குமார் என்பவர் நிலை தடுமாறி முன்னாள் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்து 50 அடி தூரம் வரை இருசக்கர இழுந்து சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த விஜேஷ் குமாரை பொதுமக்கள் ஆம்புலனஸை வரவழைத்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் விபத்துக்கு போக்குவரத்து போலீஸாரே காரணம் என கூறி அவர்களை சிறைபிடித்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் திருச்சி சாலையில் நின்றதால் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் தொடர்ந்து அத்துமீறுவதாகவும், சாவியை எடுப்பது, சட்டையை பிடித்து இழுப்பது, சாலையின் நடுவே புகுந்து வழி மறிப்பதாக போலீஸார் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...