ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 17
ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவினாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் வர்த்தக ஹாலில் வரும் 20-ம் தேதி ரோட்டரி கிளப் சார்பில் ”நைட்ஸ் இன் காக்கிஸ்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், சிறந்த 10 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட உள்ளனர். இதைத் தொடர்ந்து, ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை நீதிபதி பாஸ்கரன் வெளியிட உள்ளார்.
டி.டி. ரத்தினசபாபதிபிள்ளை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். விலங்குகள் கொடுமைப்படுத்துதலை தடுக்கும் சங்கத்தின் தலைவராகவும், ரெட் கிராஸ் சொசைட்டியின் துணைத் தலைவராகவும், கோவை பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.